காரணம் – காரியம் – காரிய காரணம் 👉நல்ல விசாரம் செய்வோம்.👈
காரணம் – காரியம் – காரிய காரணம் 👉நல்ல விசாரம் செய்வோம்.👈
== APJ அருள்.
திருவருட் பிரகாச வள்ளலாருக்கு முன்பு, எல்லா நிலைகள் குறித்தும், சமய மத பெரியோர்கள் விளக்கியுள்ளனர். சமய மதங்களில் இறை உண்மை மற்றும் தத்துவ உண்மை இவை அகமும் புறமும் சார்ந்து விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், “இறைவன் விளங்கும் உண்மை நிலை” குறித்து முழுமையாகவும் மற்றும் இறையருளின் பூரண சித்தியை பெறமுடியாத நிலை தான் அன்று நீடித்து வந்துள்ளது.
👇
முழு உண்மை உணர முடியாத இந்த நிலையில், திருவருட் பிரகாச வள்ளலார், ” ஓர் உண்மை பொது வழியை” கண்டார்கள். இதில் அனைத்து முயற்சிகளும் “அகம்” சார்ந்து மட்டுமே உள்ளதை காண முடிகிறது. மேலும், இந்த “தனி வழி”யில் அவர், இறைவனிடமே உண்மையை தெரிவிக்க வேணுமாய், தனது அக வழிபாட்டிலே வேண்டி நிற்கிறார்கள்.
இந்த வழியில், பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கத்தையே வள்ளலார் நல்கிறார்கள். அதன் அடிப்படையின் இன்று நாம் காணும் சொற்கள் “காரணம், காரியம், காரிய காரணம்” ஆகும். வள்ளலார் துணைக் கொண்டு ஒருவாறு விசாரம் செய்வோம்.
👇
முதலில், வள்ளலாருக்கு முன்பு சமய மதங்களில் காணப்படும் பொருள் காண்போம்.
காரணம் காரியம் காரிய காரணம்
அக்னி சூரியன் சந்திரன்
பூரணவடிவன் வட்டவடிவன் அர்த்தவடிவன்
ஆன்ம அறிவு ஜீவ அறிவு மன அறிவு
புருவமத்தி ஆன்மா,ஜீவன்,கரணம்,கருவி விந்து, நாதம்
பரமாகசம் அக்னி,சூரியன்,சந்திரன்,நட்சத் மின்னல்,இடி
👇
மேற்படி ஏற்கனவே வெளிப்பட்டிருந்த விளக்கத்தையும் வள்ளலார் அவர்கள் உரை நடைப்பகுதியில் தந்துள்ளார்கள்.
ஆனால்,
திருவருட் பிரகாச வள்ளலார் இந்த காரண, காரிய, காரிய காரண இவைகளை அகம் சார்ந்தே பார்க்கின்றார்கள் எனலாம்.
👇
இவை குறித்து பல பாடல்களில் நமக்கு விளக்கியுள்ளார்கள்.
👇
இவை குறித்து ஆண்டவர்தான், தனக்கு விளக்கியதாக சொல்கிறார்கள். நமக்கும் ஆண்டவரே வந்து விளக்குமாய் வேண்ட வேண்டும் என்பதே உண்மை ஆகும்.
இருப்பினும்,
👇
சுத்த சன்மார்க்கத்தில் எல்லாமே அகம் சார்ந்து தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளும் பொருட்டும், மேலும், சமய மதங்களில் பலவாறு விரிந்து கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நாம் ஒன்றி போய் கொண்டு, நாம் காலங்களை வீணடிக்க வேண்டாம் என்ற வள்ளலாரின் கட்டளை உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த விசாரம் ஆகும்.
🙏
மேலும், சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் தவிர அனைத்தும் தத்துவமே. ஏனெனில்; உண்மை கடவுள் அவர் ஒன்றெனும் ஒன்றே ஆவார். உண்மை கடவுள் காரணம் காரியம் காரிய காரணம் இவை கடந்து உள்ளார்.
👇
உலகில் பூதப் பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான தத்துவங்களின் ஒவ்வொன்றிற்கான காரண காரியம் அறிவது அறிவானாலும், எல்லாம் அறிய நமக்கு காலம் காணாது என்கிறார். நமது லட்சியம் யாதெனில்; காலம் தாழ்த்தாது, விரைந்து, கடவுள் அருள் பெற்று, நாம் சாகாமலிருப்பதே அன்றி வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
👇
காரண, காரிய, காரிய காரணம் இவைகளுக்கான, சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் வள்ளலாரின் விளக்கம் இதோ:
👇
ஒளியானது; காரண ஒளி, காரிய ஒளி, காரிய காரண ஒளி எனப்படுகிறது.
👇
இங்கு சுத்த சன்மார்க்கத்தில் மேற்படி ஒளிகள் அகத்தில் அறியப்படும் உண்மைகள். ஆம்,
👇
# அக அனுபவம் காரணம் ஒளி ஆகும் ,
👇
மேற்படி அக அனுபவ காரணத்தால் காரியப்படுவது; அறிவு ஒளி ஆகும்,
👇
மேற்படி, அக அனுபவம் மற்றும் உண்மை அறிவு இவையால் காணும் இறை ஒளி அதனால் பெறப்படுகின்ற அருள். இதுவே சுத்த சன்மார்க்கம்.
👉 இங்கு எல்லாம் அகத்தினுள்ளே என்பதை காண்க.
👇
ஆக, காரணம் காரியம், காரியம் கடந்து விளங்கும் இறைவன் கருணையால், அகத்திலே, பிரகாசமாக (அருவாக); அப்பிரகாசமே ஒளியாக (உருவாக); கண்டு, அக்காட்சியால் நாம் அடைகின்ற அருள் சுகம் (அருவுருவாக – ஒளி உடம்பாக). இதுவே காரண, காரிய, காரிய காரணம், எனலாம். 👉இவை அக கல்வியாக உள்ளது எனலாம்.
👇
ஒரு பாடலில்;
👇
காரண காரியக் கருவி இது பலவாய் ஆரணம் ஆகமம் இவை விரித்துரைத்தே அளந்திடும். நீ அவை அளந்திடன் மகனே.
👇
ஒளிக்கெல்லாம் அடைத்த காரணமாய், காரணம் கடந்த அருட்பெருஞ்ஜோதி என்பார்.
👇
அடுத்து சொல்கிறார்கள்; உலகுயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே.
👇
ஆக, புறத்தில் உயிர் இரக்கம் தவிர, வேறு எந்தொரு கடவுள் கொள்கையும், வழிபாடும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் கிடையாது, கூடாது எனத் தெரிந்துக் கொள்வோம்.
👇
ஆக, சுத்த சன்மார்க்கத்தில் இறைவனாலேயே அகத்திலே தான் எல்லாம் விளக்கப்பட்டு, அனுபவ அறிவு விளங்குகிறது. இறைவனின் அருள் ஒளி உள்ளது உள்ளபடி கண்டு, இறையருள்/ பூரண சித்தி வழங்கப்படுகிறது.
👇
ஆக, காரண காரிய காரிய காரண இவைக்கு சமய மத ஆரண ஆகம வழி போகாது, வள்ளலாரின் அக அனுபவ அறிவைப் பெற்று இறையொளி கண்டு களித்து அருள் பெறுவோம்.
🙏
நன்றி APJ அருள்.
🙏