September 16, 2024

APJ ARUL

ஏபிஜெ அருள் என்பவர் ஆணா பெண்ணா என பலர் என்னிடம் கேட்டது உண்டு. ஆணினுள் பெண், பெண்ணினுள் ஆண் என்பார் வள்ளலார். அதுபோல் தான்,

திருமதி இராமலெட்சுமி,அவர் கணவர் உயர்திரு இளங்கோ அய்யா, இவர்களின் இரு மகள்கள் அனைவரையுமே ஏபிஜெ அருள் என அழைக்கலாம்.

காரணம், எல்லோருமே திருவருட்பிரகாச வள்ளலாரின் முடிபான சுத்தசன்மார்க்கத்தை வாழ்வின் லட்சியமாக கொண்டியிருக்கிறார்கள்.

திருமதி இராமலெட்சுமி@ஏபிஜெ அருள் M.A. (Sociology), அவர்கள் கருணை சபை சாலை அறக்கட்டளையை 2009 (பதிவு எண் 4/2009) ஆம் ஆண்டு தொடங்கி, அதன் மூலம் சுத்தசன்மார்க்க பணியை செய்து வருகிறார்கள். “கருணை” என்றப் பெயரில் சுத்தசன்மார்க்க இதழ் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் உரிமை மற்றும் பதிப்பாசிரியராக  இவர் உள்ளார். பல சிறப்பு நூல்கள் கருணை பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. திருமதி இராமலெட்சுமி @ ஏபிஜெ அருள் தனக்கு இந்தளவு வள்ளலார் மார்க்கப்பணியிலும், சமூகப்பணியிலும் செல்ல ஊக்கத்தையும்  உண்மையையும் தந்தவர் தனது கணவர் என்றும், வள்ளலார் வழியில் உண்மையாகவும் உள்ளத்தில் ஆண்டவரின் நிலை காண நன்முயற்சியில் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் தன் கணவரையே அவர் ஆசிரியராக கொண்டுள்ளார். இந்திய அரசமைப்பு சட்ட சரத்து51(A)(g) அடிப்படையில் அரசு விழாவில் அசைவ உணவு கூடாது என்று கடந்த ஐந்து வருடங்களாக அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காகவும் மற்றும் சுத்த சன்மார்க்கப் பணிக்காவும் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்கள். பல முக்கிய விசயங்கள் இவர்கள் மூலம் வெற்றியடைந்திருந்தாலும் இவர்கள் தங்களை வெளிக்காட்டி கொள்ளவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிடுவது முக்கியம். திருவருட்பிரகாச வள்ளலாரை அவரால் கைவிடப்பட்ட சமயத்திலேயே காட்டிக் கொண்டியிருக்கும் செயல் நியாயமற்றது மற்றும் சட்டப்படி தவறான செயல் என்று மிக அழுத்தமாக பதிவு செய்கிறார் ஏபிஜெ அருள். இந்த முராண செயல்களை தடுத்து, முடிபான சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலாரை வெளிப்படுத்துவதே தனது முதன்மை பணி என்கிறார். இதற்கு  2004 லிருந்து இவர்கள் இப்பணிக்காக அர்பணித்துள்ளதை அவர்களின் நெருங்கி அன்பர்கள் திரு சுப்பிரமணியம், குறிஞ்சிபாடி, திரு செங்கான் அரியலூர், திரு சகாதேவ ராஜா, இராசப்பாளையம், திரு சந்திரமோகன், ஊமச்சிக்குளம் இவர்கள் மூலம் அறியமுடிகிறது. பல மாவட்டங்களின் தலைநகரில் தனது அன்பர்களுடன் பல அறவழிப் போரட்டங்களை நடத்தியுள்ளார்கள். தனது பணியில் இன்னும் மூன்று பணிகள் நிலுவையாக உள்ளது என்கிறார்.அவையாவன;

1) சுத்த சன்மார்க்கம் ஒரு தனி மார்க்கம் என்று சட்டத்தின்பால் அங்கீகாரம் பெற்று, வள்ளலார் நெறி சார்ந்தோர்கள் அரசு  ஆவணங்களில் ” சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர் என்று குறிப்பிட வேண்டும். அதற்கான துரித நடவடிக்கைகள் எடுத்தல்.

2) வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கம் உள்ளது உள்ளபடியாக வெளிப்படுவதற்கு “ஒரு திரைப்படம்” ஒன்று எடுத்தல், மற்றும்

3) ஜீவகாருண்ய அடிப்படையில்  சில ஏக்கர் அளவில்  நிலம் வாங்கி, வள்ளலார் கண்ட மூலிகை பண்ணை அமைத்து, ஏழை எளியோர்க்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்த விலையிலும் கிடைக்க ஒரு நிலையம் அமைத்தல், அதில்  இலவச மருத்துவமனை, கைவிடப்பட்ட ஏழை முதியோர்களுக்கு கடைசி வரை ஆதரவு அளிக்கும் இல்லம் அமைத்து பராமரித்தல் என்பன இவை மட்டுமே செய்ய வேண்டிய பணியாக வரையறுத்துள்ளதாக தெரிவித்தார்.

      இதுவரை தன்னை வெளிக்காட்டாமல் தனது சொந்த செலவிலேயே அனைத்தும் செய்து வந்ததை நான் உறுதி செய்த போது, இது வள்ளலார் இவர்கள் பால் கொண்ட அன்பும், இறையருளுமே காரணம் ஆகும். மிக முக்கிய பெரிய விசயங்களுக்கு தன் போல் எண்ணம் கொண்ட மிக சிலரின் உதவியை தான் பயன்படுத்தியதையும் சொல்ல மறக்கவில்லை.  இது நாள் வரை பணியாற்றிவிட்டேன். இனி, தான் ஆற்றிய கடந்த கால பணிகளை  தொடர்ந்து செய்ய இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கிறார். இனி, தான்  மேற்படி சொன்ன முதல் இரு பணிக்காக பணியாற்றி, வள்ளலார் வழியில் இடைவிடாது நன்முயற்சி செய்து பேரின்ப பெருவாழ்வை பெற்று, உலகிற்கு சுத்த சன்மார்க்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதே தன் (தங்கள்) லட்சியம் என்று சொல்லி அவர்கள் கண்ணீர் விட்டதை கண்ட நான் அன்றே வள்ளலார் வழியை தேர்வு செய்தேன் என்பதை இங்கு உண்மையாக பதிவு செய்கிறேன்.

அன்புடன்;

ரவிச்சந்திரன்.மா

வள்ளுவர் வள்ளலார் மன்றம், சென்னை

APJ ARUL Facebook page:

https://www.facebook.com/vallalar.karunai

APJ ARUL Twitter page:

https://twitter.com/karunaivallalar

APJ ARUL Vallalarspace page:

http://www.vallalarspace.org/KarunaiSabai/

APJ ARUL [KARUNAI SABAI] gmail ID:

சுத்த சன்மார்க்க கேள்விகள் – அனுப்பவேண்டிய முகவரி[பதில் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தில் அனுப்பப்படும்]

[email protected]

APJ ARUL [KARUNAI SABAI] YouTube Video’s:

https://www.youtube.com/channel/UC7dPhF0A4d8A7AyZhUUSJkQ

APJ ARUL [KARUNAI SABAI] Postal Address:

கருணை சபை சாலை அறக்கட்டளை[பதிவு எண். 4/2009]

மனை எண். 34, கிரேஸ் ஹால், பூம்புகார் நகர் வடக்கு விரிவாக்கம்,

உத்தங்குடி, மதுரை-625107

போன்: 8778874134

சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்