October 4, 2024
tamil katturai APJ arul

அருட்பாவில் நல்ல விசாரம்-1

*அருள்விளக்கமாலை*:-

 *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே

பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே

 *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய

வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே

 *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே

விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே

 *ஊன்மறுத்த* பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

– –இப்பாலில் ஒருவாறு விசாரம் — ஏபிஜெ அருள் ?
#
ஆகா, நல்ல விசாரத்திற்கானப் பாடல் இது. வாருங்கள் ஒருவாறு விசாரம் செய்வோம். 
“பான் மறுத்து…” 
அதாவது பால் குடி மறந்து விளங்கும் பருவத்தில்
” உலக இச்சையிலே” பதியாது,
அடுத்து,
“மான்” மறுத்து என்பது திருமால் – வைணவக் கொள்கையை மறுத்த சைவ சமய ஐந்தெழுத்து பஞ்சாக்கர அக்ஷரத்தில் லட்சியம் கொண்டு;
அடுத்து,
” மீன் ” மறுத்து,  தான் கொண்டிருந்த
 ” சிவன் ” கொள்கை சைவ சமயம் மறுத்து
” விண் ஜோதி ” பெரு வெளிக்  கொள்கை கொண்டு;
அடுத்து,
” ஊன் மறுத்த” அதாவது உடம்பால்  பெறும் பசுஞானக் கொள்கையான ஆன்மாவிலேயே கலந்து கிடக்கும் நிலையை மறுத்து, அது கடந்த ஓர் உயர்ந்த அறிவுடையோருக்கு  கிடைக்கும் உடல் பெறும் தனிவடிவம் “ஒளி வடிவக்”  கொள்கை ..  ( வள்ளலார் முதன்மையாக கண்ட தனி நெறி)
“நல்ல விசாரமே” சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு ?
# அருட்பாவில் நல்ல விசாரம் -1#
— ஏபிஜெ அருள். 

unmai

Channai,Tamilnadu,India