அருட்பாவில் நல்ல விசாரம்-2
# அருட்பாவில் நல்ல விசாரம் -2#
— ஏபிஜெ அருள்.
பாடல்:-
“இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே”.
விசாரம்: –
இங்குள்ள
இணை, துணை, தோய்ந்த என்னை அணை..என்ற வார்த்தைகளை கருத்தில் வைத்து, திரும்பவும் இந்த பாடலை ஒருமுறை படியுங்கள்.
சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்த வள்ளலாரே, தனக்கு “இணை“யானவர் என்றும், அதனால் வள்ளலாருக்கு நல்ல “துணை“யாக இருக்க வந்தார் ஆண்டவர். வந்தவர் “அணை” என்றுச் சொல்லி அவரே அணைத்துக்கொண்ட
“அன்புடைக்
காமம்” இருவரிடையே நடந்தது.
அன்புடைக்காமம் என்பதற்கு பொருள்
” ஐந்திணை ” என்கிறது தமிழ் அகராதி.
இந்த “திணைஐந்து”மாகியதே சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் “பெருங்கருணை”யாகிய உத்தர ஞான சிதம்பரம்.
நன்றி அன்புடன் ஏபிஜெ அருள்.
நல்ல விசாரமே
சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு.