September 16, 2024
tamil katturai APJ arul

“புருவமத்தி” என்பது எந்த இடத்தை குறிக்கிறது?

puruva-maththi

” புருவமத்தி என்பது எது?
எங்குள்ளது?
தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே.

காரணம்,
” புருவமத்தி கண்ணே ” நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்.”
” … புருவமத்தியில் நிற்க செய்தல் ”
என வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் உள்ளது. (இரண்டரை அங்குல இடைவெளியில்)
கோசம், தொப்புள், மார்பு,கண்டம்,அண்ணாக்கு,
புருவமத்தி… எனச் சொல்லப்பட்டதில் புருவமத்தி தவிர மற்றவையின் இடம் சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், உண்ணாக்கு மேல் இரண்டரை அங்குலத்தில் புருவமத்தி உள்ளதாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ” புருவமத்தி” என்பது எதைக் குறிக்கிறது?
மற்றும்,
சுத்த சன்மார்க்க நெறியில்
புருவமத்தி பயிற்சி உண்டா?
இல்லை என்றால் வள்ளலார் செய்ய சொல்லும் நன்முயற்சி எது?
சான்றோர்கள் விளக்கம் அளித்து விசாரம் செய்யுமாறு பணிவுடன் அழைக்கிறேன்.
? நன்றி. ஏபிஜெ அருள்.
விசாரத்திற்கு உதவும் வகையில் தொடர்புடைய
” சுத்த சன்மார்க்கப்
பாடல்கள் “  கீழே தரப்பட்டுள்ளது.

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
#6-044 ஆறாம் திருமுறை / திருவடி நிலை
தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே.
#6-044 ஆறாம் திருமுறை / திருவடி நிலை
அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.
#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
பகுதியும் காலம்முதலாப்
பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
பரமாதி நாதம்வரையும்
சீராய பரவிந்து பரநாத முந்தனது
திகழங்கம் என்றுரைப்பத்
திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
தெய்வமே என்றும்அழியா
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
உயர்தந்தை யேஎன்உள்ளே
உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
உவப்பேஎன் னுடையஉயிரே
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
அரசே அருட்சோதியே
அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
அமுதநட ராஜபதியே.
#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி
விந்து ஒளிநடு ஜோதி – பர
விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம்துயர் தீர்த்தருள் ஜோதி – பர
நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. சிவசிவ
#6-129 ஆறாம் திருமுறை / அருட்காட்சி
 மயில் – விந்து. குயில் – நாதம்.
  அருட்பெருஞ்ஜோதி அகவல்
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
கண்பெற நடத்துங் ககனமா மணியே
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
#6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
#6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
நண்ணியும் கண்ணுறா தந்தோ
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
திரும்பின எனில்அதன் இயலை
இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
இசைத்திடு வேம்என நாவை
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
#6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
 6-006 ஆறாம் திருமுறை / ஆற்றாமை
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
 கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
 மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
 கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
தற்போத இழப்பு
கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
 புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
 கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
: பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
: மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
: இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
: திருநடப் புகழ்ச்சி:
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
இறை இன்பக் குழைவு
கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்
அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.-
திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே
 கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
தருகின்றோம் இன்னே என்றென்
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
திருக்கின்ற கருத்தன் தன்னைப்
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
மெய்இன்பப் பொருளை என்றன்
அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
: கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்
அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
மூவகை யாம்உடல் ஆதியை நுமது
பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
ஏகா நினக்கடிமை ஏற்று.
 துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.
: பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
: என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
இதயத்தி லேதயவிலே
என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
என்இயற் குணம்அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
என்செவிப் புலன்இசையிலே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்
தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
சுகமே சுகாதீதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
ஏதாக முடியுமோஎன்
றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
றேங்கிய இராவில்ஒருநாள்
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
வெளிநின் றணைத்தென்உள்ளே
மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
வீற்றிருக் கின்றகுருவே
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
நல்குரவி னோன்அடைந்த
நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
நான்கண்டு கொண்டமகிழ்வே
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
வலியவந் தாண்டபரமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.

unmai

Channai,Tamilnadu,India