November 8, 2024
tamil katturai APJ arul

ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி

ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.
ஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே! பக்தர்களை ஏமாற்றாதே! என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே!” என்பதில் வெற்றிக்கு சாத்தியமில்லை என்றே சொல்லலாம். காரணம், ஏமாற்றுபவன் (அரசியலில் மக்களை/ ஆன்மீகத்தில் பக்தர்களை) மக்களை ஏமாற்றி பலன் அடையவேண்டும் என்று தீர்மானித்தே, களத்தில் இறங்குகிறான். ஆனால், ஏமாறுபவன், தான் ஏமாற வேண்டும் என தீர்மானித்து இருக்கவில்லை. திட்டம் தீட்டியவன், காரியத்தை எப்பேற்பட்டாவது நிறைவேற்றப் பார்ப்பான். ஏமாற்றுபவனிடம் வேகமும் உறுதியும் இருக்கும். 
பூட்டை தாயாரித்தவன் அறிவாளி என்றால், அறிவாளி தாயாரித்து, பூட்டிய பூட்டை உடைக்கும் திருடன் ….? 
என் ஆண்டவனால் பெற்றேன் பதவியும் பணமும் ஆரோக்கியமும் எனும் ஆன்மீக நம்பிக்கையில் நாம், ஆனால், 
மற்ற சமயமத நம்பிக்கை உள்ளவர்களும் இதே போல் பதவியும்,பணமும், ஆரோக்கியமும் பெற்றியிருப்பதை குறித்து… ???
ஏன், கெட்டவனிடம் அதே பதவி,பணம், ஆரோக்கியம் உள்ளதே…??
(அரசியல் குறித்து இங்கு வேண்டாம்).
ஆன்மீகத்தில், எத்தனை விதமான ஏமாற்று வேலைகள்?
ஆம்.
ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி .
ஆம். பக்தர்களை ஏமாறாமல் இருக்க வைக்க முடியும். 
ஏமாற்றும் சாமியார்களை / மார்க்கக்கொள்கையை; 
திருத்தவோ/மாற்றவோ முடியவே முடியாது.
ஏமாற்றுபவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள். 
சுவர் இருந்தா சித்திரம் வரையலாம் அது போல் ஏமாறுபவர்கள் இருந்தா ஏமாற்றலாம்.
ஆமாம்,….
நாம் ஏமாற்றுபவர்களா? ஏமாறுபவர்களா?
இது “ஏமாறுபவர்களுக்கான” கட்டுரை.
இக்கட்டுரையில் உதாரணத்திற்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துக் கொள்வோம்.
ஏமாற்றும் வேலைகள்.. உதாரணத்திற்கு சில.
# நெற்றிக்கண் பூட்டு திறந்து விடப்படும்.
# வள்ளலார் பெயரில், மூச்சு பயிற்சி மூலம் சாகா கல்வி.
# இவரே சுத்த சன்மார்க்க குரு, இவரே வள்ளலாரின் மறு பிறவி என்பது..
# மார்க்கத்தார்களுக்கு குருவாக இருந்து, கையால் ஆசீர்வதித்தல்
# ஜீவகாருண்யமே, கொல்லாமையே, சுத்த சன்மார்க்க நெறி எனச் சொல்லுதல்
# வள்ளலாரின் கொள்கையான “சாகா வரம்” பெற பயிற்சி கொடுத்தல்
# வள்ளலாரின் திருஅகவலை சமயமத கோயிலில் பாடுதல்.
என்பவை சிலரால் நடத்தப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

இது சரியா..? சரியில்லையா..?

சரியில்லை என்றால் ஏமாற்று வேலை. சரியில்லாதவையில், முயற்சி நாம் செய்தால், வள்ளலார் பெற்ற பயனை நாம் பெறமுடியாது.அப்படித்தானே.
(இங்கு மிகச்சிலரே அபக்குவத்தில் அதாவது ஏமாற்ற வேண்டும் என்பது இல்லாமல் இதே தவறான வேலையை செய்வார்கள்.)
“பலன்களுக்கு” தான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்று வேலையில் இறங்கி உள்ளனர்.
ஏமாறுபவர்களுக்கு, ஏமாற்றுபவர்கள் பெற்ற “பலனில்” பங்கு கிடையாது. ஏனென்றால், ஏமாறுபவனே அப்பலன்களை முழுமையாக கொடுப்பவன்.
சரி..
ஏமாறாமல் இருக்க என்ன செய்ய?
ஒரே வழி,
“எதை வைத்து ஏமாற்றப்படுகிறோமோ , அதன் உண்மையை நாமே தெரிந்துக் கொள்ள வேண்டும்.”
மேலே சொன்னவையின் உண்மை தெரிய நாமே லள்ளலாரை/ அவர் கொள்கைப் பற்றி நேரிடையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இதோ வள்ளலார் சத்திய வாக்கியங்கள்:::
# ” உள்ளழுந்தி, அதை சிந்தித்து, சிந்தித்தலை விசாரித்தல்..”
# என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை.”
# தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னை தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.
# அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம் ( பலனின்மை) சுத்த சன்மார்க்கமே சிறந்தது.
# ஜீவகாருண்யம் இறைவீட்டின் திறவுகோல். (அதாவது ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் உண்ணாமை இவை சுத்த சன்மார்க்கத்தில் அடிப்படை தகுதியாக உள்ளது.இவை சமயமத மார்க்கத்திலும் அதன் இயல்பாக உள்ளதாக வள்ளலார் சொல்கிறார்கள்)
# என்னைப்போல் நீங்களும் ( சமயம், ஆசாரங்களை) விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள்..”
# எனக்கு உண்மையை, ஆண்டவரே
குருவாக இருந்து தெரிவித்தார். சாகா கல்வி ஆண்டவரே தெரிவித்து, சாகாவரம் அளித்தார்.
# நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து,
கண்ணீரால் இரக்கம் விட்டு இறைவன் அருள் கண்டேன்.( வள்ளலார் எவரையும் கைவிரித்து ஆசீர்வதிக்கவும் இல்லை.)
# சுத்த சன்மார்க்கத்தில் வரும் கடவுள் சமய சாத்திர புராணங்களில் வரும் கடவுளர்,தேவர், அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல….”
# ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து..
என மேற்படியாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி விளங்குகிறது.
இப்ப சொல்லுங்க..

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பெயரில் குரு நான் என்றும், சாகா கல்வி பயிற்சி, அகவல் கோயிலில் வாசித்தல்,ஜீவகாருண்யம் மட்டுமே சொல்வது, வள்ளலாரை தெய்வமாக்குவது, ஆசாரங்கள் சடங்குகள் செய்வது, இவை எல்லாம்
சுத்த சன்மார்க்கத்தில் உண்டா..??
கிடையவே… கிடையாது.
இனி நாம் ஏமாறமாட்டோம்.
ஆனால் அந்த ஏமாற்றும் வேலை இருக்கத்தான் செய்யும். ஏமாற்றுபவர்களுக்கு அவத்தைகள் வந்து சேரும். 
அன்புடன்::
ஏபிஜெ அருள்.
கருணை சபை சாலை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி .

unmai

Channai,Tamilnadu,India