December 8, 2023
tamil katturai APJ arul

”அவசரம். சீக்கிரம் வா.”– ஏபிஜெ. அருள்

நான் ஒரு வழக்கறிஞர்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து பேப்ரின் செய்திகளை படித்தேன்.
நாட்டு நடப்புகளை அறிந்ததால் களைப்பு ஏற்பட்டது.
செல் ரிங் அடித்தது. கேஸ் விசயமாக பார்டி பேசுவார்கள் என எண்ணி எடுக்காமல் உட்கார்ந்து விட்டேன். மீண்டும் தொடர்ந்து அடிக்க, சென்று எடுத்தேன். எனது தோழன்.
”என்னடா என்ன விசயம்?” என கேட்டேன்.
“ அவசரம் சீக்கிரம் வா” என்றான்.
விசயத்தை சொல்லு என்றேன்.
வேதாச்சலம் வந்திருக்காரு. அதான் எனக்கு வீடு விற்றாரே. அந்த வேதாச்சலம் தான் என்றான்.
“நல்ல மனிதர் தானே. என்ன பிரச்சனை” என்றேன்.
நீ நேரே வா. அவர் சொல்லறத கேட்டா கோபம் கோபமாக வருகிறது.
சரிப்பா நீயே கோபப்படலாமா? வள்ளலார் மார்க்கத்தை சேர்ந்தவன். பொறுமையாக இரு என்றேன் அவனிடம்.
அவன் பேசறத நீ கேட்டுப் பாரு அப்பறம் புரியும் என்றான் என் நண்பன்.
சரி வரேன் என்று கூறி கிளம்பிவிட்டேன்.
(வண்டி ஓட்டும் பொழுது என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையே. வேதாச்சலம் நல்ல மனிதர் தானே. பிரச்சனை பண்ணக்கூடிய ஆளில்லையே. தன் வீட்டை ஒரு நல்ல மனிதருக்குதான் கொடுப்பேன் என்றுக்கூறினார். அதணால் தான் எனது நண்பரை அறிமுகப்படுத்தி இந்த வீட்டை அவனுக்கு விற்கச் செய்தேன். என்ன பிரச்சனை????? ஒன்றுமே புரிய மாட்டேன்கிறதே.)
இதோ வீடு வந்து விட்டது.
வாங்க வேதாச்சலம் அய்யா, நலமா? ஏன் வீட்டுக்கு வெளியேவே உட்கார்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க என்றேன்.
இல்லப்பா உன் நண்பனிடம் நியாயம் இல்லை என்றார்.
சரி அமைதியா இருங்க விசாரிக்கிறேன் என்று உள்ளே சென்றேன்.
என் நண்பனிடம் விசயம் என்ன? என்றேன்.
””சொல்றேன் கேளு. உனக்கும் தலையே சுத்தும்.என்னிடம் வந்து, இது என் வீடு நீங்க இருக்கீறீங்கன்னாரு? ஏதோ விளையாடுறாரு என நினைச்சா… சீரியசா தான் சொல்றேன் என்கிறாரு.
என்னய்யா விளையாடுறீங்களா? இந்த பாருங்க நீங்க 2013 ல் எழுதி கொடுத்த பத்திரம் என்றேன்.
அது இருக்கட்டும். இந்த நான் வைத்திருக்கும் பத்திரத்தைப் பாரு என்றார். வாங்கி பார்த்தேன். அது 2000 ல் அவர் இந்த வீட்டை கிரையம் வாங்கிய பத்திரம். அய்யா இதுக்கு பின்பு உங்களிடம் நான் இந்த வீட்டை கிரையம் வாங்கி விட்டேன். கடைசியாக இந்நாள் வரை எனது பத்திரமே செல்லும் என்றேன். அதற்கு திரும்பவும் அவர்: தம்பி எனது பத்திரத்தை பாருன்னு 2000 த்தில் எழுதியுள்ள பத்திரத்தையே காட்டி, யார் பெயரில் வீடு உள்ளது.? என் பெயரில் தானே!!! என்கிறான்.
மீண்டும் நான்:: “ அய்யா, அதற்கு பின்பு நான் கிரையம் செய்து உள்ளனே….என்றேன். காதிலேயே வாங்காமல் அது இருக்கட்டும் மீண்டும்; “இந்த பத்திரத்தை பாரு” என்கிறார்??? அதனால் தான் உன்னை கூப்பிட்டேன். நீயே கேளு.””
வெளியே வந்து என்ன அய்யா, ஏன் இப்படி? என்றேன்.
என்ன இப்படி என்றார்?
என்ன அய்யா என்னிடமேவா?? என்று சற்று சத்தமாக கேட்டேன்.
தம்பீ, உன் நண்பன் செய்தால் சரி. நான் செய்தால் தவறா? என்றார்.
என்ன அய்யா விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.
“உன் நண்பரின் கட்டுரையை நெட்டில் படித்தேன். அதில் வள்ளலாரை அவரால் முற்றிலும் கைவிடப்பட்ட அவரின் முந்தைய சமயப் பற்றில் வெளிப்படுத்தியிருந்தார். வள்ளலார் முதலில் ஓர் சமயத்தில் பற்று வைத்திருந்தார். அதன் திருஅடையாளமாக இருக்கும் திரு நீறை பூசியிருந்தார்கள். எல்லாருக்கும் கொடுத்தார்கள்.பலருக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.
அதன் பின்பு, தான் வைத்திருந்த சமயப்பற்று, சாத்திர ஆச்சாரங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, ஓர் புதிய மார்க்கத்தை கண்டார்கள். ஆனால் உன் நண்பரோ வள்ளலாரை அவர்தம் முந்தையப் பற்றுலேயே வெளிப்படுத்தி வருகிறார். யாரெனும் கேட்டால் இதுவும் வள்ளலார் தானே சொல்லியுள்ளார் என பதில் சொல்கிறார்.வெளிப்படுத்தும் செயலை தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கே இப்படி நடித்தேன். சொந்த விசயத்துக்கு ஒரு நியாயம். வள்ளலாருக்கு ஒரு நியாயமா? எனது பத்திரத்திற்கு பின்பு ஏற்படுத்திய அவர் பத்திரம் அவருக்கு வேணும்.ஆனால் வள்ளலார் பின்பு ஏற்படுத்திய புதிய நெறி வேண்டாமோ??
வள்ளலாரை அவரின் முடிபான நெறியில் காட்டாமல் பழைய கைவிடப்பட்ட நெறியில் வெளிப்படுத்துவது என்ன நியாயம் என்கிறேன்?
“”நீங்களே சொல்லுங்க.””
திகைத்து நின்றேன்.
இதை விட உனக்கு விளக்க முடியாதுப்பா என நண்பனிடம் கூறினேன். நான் வாரேனு கிளம்பி விட்டேன்.
சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.
வேதாச்சல அய்யாவின் கைகளை என் நண்பன் பற்றிக் கொண்டிருந்தான்.
உண்மை வெளிப்பட்டே தீரும். உண்மையை உணர்ந்தே ஆக வேண்டும்.

unmai

Channai,Tamilnadu,India