February 28, 2024

கேள்வி-பதில்

QA-image

கேள்வி-1 :- 
1. கருணை விருத்திக்கு ஆசாரங்கள் தடை, எங்ஙணம்? – தயவு செய்து விளக்கவும் அய்யா. 
நல்லவிசாரணை:-
முக்கிய கேள்வி எழுப்பினார் நல்ல விசாரணைக்கு. வள்ளலார் வழியில் ஒரு நல்ல விசாரம் செய்யவோம் – – – ஏபிஜெ அருள், கருணை சபை. 
1. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை உள்ளது என்கிறார் வள்ளலார். 
2. அடுத்து முக்கியமாக 
சுத்த சன்மார்க்கத்தார்களிடத்தில் பொது நோக்கம்
வருதல் வேண்டும் என்கிறார் வள்ளலார். 
3. கருணை ஒன்றே சுத்த சன்மார்க்கத்தின் சாதனம். 
4. சாகா கல்வியே மரபாக உள்ளது. 
ஆக, மேற்படி நான்கும் இம்மார்க்கத்தின் முக்கிய பகுதியாகவும், மார்க்கத்தார்களுக்கு கடமையாகவும் உள்ளது. 
அடுத்து இதை மேலும் உறுதி செய்ய திருஅருட்பா பாடல்களில் உள்ள வாக்கியங்களுக்கு செல்வோம். 

பொது விளங்க… 
பொதுவது…
பொதுவியல்…
உயிரெல்லாம் பொதுவிலே உளம்பட நோக்குக… 
பொதுவடைதல் வேண்டும்… 
பொதுவாம் தெய்வம்… 

ஆக, 
நம்மிடம் பொது நோக்கம் வர வேண்டும். ஆனால், 
கீழே தரப்பட்டுள்ள ஆசாரங்களில்  பொது நோக்கம்  உள்ளதா? 
1. சாதி, 
2. குலம், 
3. லோகம், 
4. தேசம்.
இவையில் பற்று உள்ளவர்கள் பொதுவானவர்கள் எனச் சொல்ல முடியாது. மேலே உள்ளதில் பற்றுள்ளவர்களிடத்தில் பொது நிலை, பொது இயல், பரிபூரணம், ஆன்ம நேயம் இருக்க முடியாது. 
அடுத்து வரும் ஆசாரங்களை வள்ளலார் எக்காலத்தும் முக்கிய தடையாகவே அறிவித்துள்ளார் வள்ளலார். 
அவை, 
சமய, மத, சாத்திரங்கள். 
மேலும் இவையில் வெளிப்படும் கடவுள் பல.  இதில்  பொதுவாக கடவுள் என இல்லாமல் பல நாம, ரூபங்களில்  உள்ளது. 
அடுத்து வரும் ஆசாரங்கள்:
5.சாதன,

6. மரபு,

7. கிரியா,

8.கலாசரங்கள். 

உண்மை இறைவன் ஒன்றொனும் ஒன்றே. இந்த ஒன்றொனும் ஒன்றிலே தான் அனைத்தும் தோற்றம். தோன்றியவைக்கு பக்குவம் இறைவனாலே கொடுக்கப்படுகிறது. 
எல்லாம், எல்லாமாக உள்ள கடவுளுக்கு எதுக்கு சடங்கு, சாதனம் சம்பிரதாயங்கள். முடியாது, கூடாது. 
இங்கு வழிப்பாட்டு சாதனம் இரக்கமே. 
பாடல்:

… நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந்து… “

மற்றொரு பாடலில்… 

“… என்போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே… “

ஆக, 
உலக உயிர்களை தம் உயிர்கள் போல் பார்க்கத் தடையாக உள்ள 
சாதி ஆசாரம் 
குல ஆசாரம் 
லோக ஆசாரம்
தேச ஆசாரம்
சுத்தசன்மார்க்கத்தார்களிடம் கூடாது. 
அடுத்து, 
இம்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடையாக உள்ள 
சமய மத ஆசாரங்கள் 
சாத்திர, கிரியா ஆசாரங்கள்
நமக்கு கூடாது. 
கருணை ஒன்றே சாதனமாகவும், இரக்கம் வழிபாடாகவும் உள்ள போது
மற்ற சாதன, கிரியா ஆசாரம் இங்கு கூடாது. 
ஆதாரம் விண்ணப்பம்:
எக்காலத்தும் முக்கிய சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில்  பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும் என்கிறார் வள்ளலார். 
****************************
பாடல்:
****************************
பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
*****************************
பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
********************************
பொதுநடம் புரிகின்ற பொருளே.
********************************
ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
******************************
சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
நீதிப் பொதுவே நிறைநிதியே – சோதிக்
கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்
விடவுளே நின்று விளங்கு.
********************************
விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
விளைந்தது விளைந்தது மனனே
கண்ணெலாம் களிக்கக் காணலாம்
பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
*********************************
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
எனக்கும் உனக்கும்
*******************************
பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
*******************************
பொதுநிலைஅருள்வது
 பொதுவினில் நிறைவது
பொதுநலம் உடையது 
பொதுநடம் இடுவது
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
அரஅர அரஅர அரஅர அரஅர.
*******************************
பொதுவில்அருட் கூத்தாடும் 
********************************
ஆக, 

பொது நோக்கம், 

பொதுவாக கடவுள் என அழைத்தல், 

எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்தல், 

உள்ளத்தில் உண்மை காணுதல், 

மரணம் முதலிய அவத்தைகள் நீக்க முயற்சித்தல், 

மேற்படியான இவை நம்மிடம் விருத்தியாகமல் தடுப்பது இந்த சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே எனக் கண்டோம். அதனால் தான் வள்ளலார் இவைகளை விட்டொழிக்க வேண்டும் என்கிறார். 

தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது”
ஆக நம்மிடம் ஒழிந்து போக வேண்டிய ஆச்சாரங்கள் (முக்கியமானவை):
.
1.ஜாதியாசாரம், 2.குலாசாரம், 3.ஆசிரமாசாரம், 4.லோகாசாரம், 5.தேசாசாரம், 6.கிரியாசாரம், 7.சமயாசாரம், 8.மதாசாரம், 9.மரபாசாரம், 10.கலாசாரம், 11.சாதனாசாரம், 12.அந்தாசாரம், 13.சாத்திராசாரம்,
இந்த ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும்.
பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
பொது நோக்கம் வருவித்துக்கொள்ளல் வேண்டும்.
சாதி, குலம், ஆசிரமம், லோகம், தேசம், கிரியா, சமயம், மதம், மரபு, கலா, சாதனம், அந்தம், சாத்திரம் என்றால் என்ன? இதில் சிலது தெரியும்.
ஆசாரம் என்றால்; ”வழக்கம்” எனப்படும்.
1. ஜாதி : வருணம், இனம் ( இனப்பழக்க வழக்கங்கள்)
2. குலம் : குடி (வீடு) (குலப்படியான வழக்கம், வீட்டு முறை)
3. ஆசிரமம் : ஆச்சிரமம். வாழ்க்கை முறை / உறைவிடம்
4. லோகம் : உலகம் (உலகத்தாரொழுக்கம்- உலக பழக்க வழக்கம்)
5. தேசம் : நாடு ( நாட்டு வழக்கம்)
6. கிரியை : செய்கை – உபாயம் – சடங்கு விதி (உபாய வழி வழக்கம்)
7. சமயம் : சைவம், வைணவம், பெளத்துவம் போன்ற சமயங்களின்
வழக்கங்கள்
8. மதம் : வேதம், சித்தாந்தம் போன்ற மதங்களின் வழக்கங்கள்.
9. மரபு ; பாரம்பரியம், பழமை, ( பழமையான, பாரம்பரியமான வழக்கம்)
10.கலா : பண்பாடு ( பண்பாடு, மொழி பழக்க வழக்கம்)
11.சாதனம் : கருவி, சின்னம், பயிற்சி (இவைகளின் வழக்கம்)
12 அந்த : உள்ளடங்கிருத்தல் (முடிவாக மரணமே என்ற அஞ்ஞான
வழக்கம்/முக்தி)
13. சாத்திரம் : சமய,மத நூல்கள் அடிப்படையில் பழக்க வழக்கங்கள்.
ஆச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும். விட்டொழிக்காமல் கருணையை விருத்தி செய்ய முடியாது. கருணை நம்மிடம் விருத்தியாகவில்லை என்றால் உண்மை நம் உள்ளத்தில் பதியாது.
இதை பல இடங்களில் உறுதி செய்யலாம்.
வள்ளாலாரின் சத்திய சிறு விண்ணப்பம்: பக்கம் 556 கடைசி பாரா.
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.”
மீண்டும் வாசியுங்கள்: “……முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,…..”
இங்கு, சங்கற்பம் என்றால்;- மனோ நிச்சயமான கொள்கை, கருத்து
விகற்பம் என்றால்:- மனோ மாறுபாட்டிலுள்ள வழக்கங்கள்.
அன்பர்களே! இங்ஙனம் வள்ளலார் சொல்லிருக்க, மற்ற சமய,மத மார்க்கங்களின் கொள்கை மற்றும் உலக பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு எக்காலத்தும் முக்கியத்தடைகளா இல்லையா?
இன்னொரு இடத்திலும் இதை உறுதி செய்வோம்.. பக்கம் : 410 அதுவும் திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் நம் வள்ளலார் கீழ் வருமாறு சொல்கிறார்கள்:
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லை.”
யாதெனில்;
இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக உடையது கடமை.”
அன்பர்களே! இந்த உண்மை நம் வள்ளலார் சொன்னாலும் நாம் கடைப்பிடிக்கிறோமா? சிந்தியுங்கள். விசாரியுங்கள்?

நன்றி:ஏபிஜெ அருள். 

கேள்வி-2 :- 
அகத்தில் ஜோதியை தரிசிப்பது எப்படி??
ஐயா, ஆத்ம ஜோதி பிஷ்ணு ராம்

நல்ல விசாரணை:ஏபிஜெ அருள். 

இக்கேள்வியும், 

சுத்த சன்மார்க்கத்தின் நெறி என்ன? என்பதும், உண்மை அனுபவித்தால் என்ன? என்பதும்,  ஒன்றே. 
இக்கேள்விக்கு விடை பாடல்களில், விண்ணப்பங்களில் காணலாம். 
கீழ் வரும் பாடல்கள் உதவும்.

“சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
*******************************
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
**********************
கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
**************************
ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உணர்கிறேன் சத்தியத்தெள் ளமுதே.
**************************
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
*****************************
பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
*******************************
உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
ஒருசிவ மயமென உணர்ந்தேன்
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
கருத்தயல் கருதிய துண்டோ
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
********************************

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.