வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்

வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்:-

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை.”இங்கு “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்” என உள்ளது. இதன் அர்த்தம்;எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளும் குணம் என்கிறார் வள்ளலார். இந்த உணர்வு நம்மிடம் இருவகையில் காரியப்படுவதாக வள்ளலார் சொல்கிறார்கள்.நம் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.மேற்படி செய்யக்கூடிய இரண்டில்முதலாவது புறம் இரண்டாவது அகம்.வள்ளலார் பயணித்த வழி இதுவே.வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் நாம் செய்யக் கூடிய பயிற்சியும் சாதனமும் இதுவே.

புறத்தில் சாதனம்;தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல்.

அகத்தில் சாதனம்;ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.(இதுவே நாம் செய்யக் கூடிய ஜீவத்தயவு என்கிறார்).

ஆக,ஒன்று (புறத்தில்),ஆன்மாக்களுக்கு  உபகரித்தல் அல்லது (நேராத பட்சத்தில்)  பிரார்த்தித்தல்.அல்லதுஇரண்டு (அகத்தில்)விசாரம் செய்தல். எப்படி எனில்;”..கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது…”இதுவே வள்ளலார் பயணித்த வழி.நிற்க!(மிக முக்கியம் இந்த இடம்)

இது வள்ளலார் கண்ட தனி வழி என்று எப்படி ஆகும்?

வள்ளலார் காலத்து முன்பே இந்த (தயவு) சாதனம் ஞானிகளிடத்தில் இருந்ததே. இந்த தயவு சாதனத்தால் நான் சாகாவரம் பெற்றேன். எனக்கு முன் எவரும் இந்த பேரின்ப வாழ்வு பெறவில்லை என்று வள்ளலார் எப்படி சொல்ல முடியும்??வள்ளலார் மற்ற மார்க்கங்களை பற்றியும் தனக்கு முன் ஞானிகள், யோகிகள், தேவர்கள், தலைவர்கள் பற்றியும் சொன்னதை பார்ப்போம்.முன் மார்க்கங்கள் முக்தி,சாமாதி பற்றி வியம்புகிறது. அதன் படியே அந்தளவே சித்திகள் (பலன்கள்) பெற்றனர். பூரண சித்தியாம் மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் எவரும் வாழவில்லை. அங்ஙனம்வாழ முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆசைப்படவும் இல்லை. ஆசைப்பட்டியிருந்தாலும் அதற்கான வழி அவர்களின் சமயம் மதம் சொல்லவில்லை. அவர்களில் சிலர் முயற்சியால் நீடுழி வாழ்ந்தனர் ஆனால் இறுதியில் சமாதி அடையவே செய்தனர். ஆக, முக்தியே முன் மார்க்கங்களில் பயனாக இருந்தது. இந்த அளவு பயனுக்கே சிந்திக்க வைத்தது சமயமத மார்க்கங்கள். இதுவே கடவுள் அருளாகப் பார்க்கப்பட்டது.நிற்க!அது எப்படி? எந்த சாதனத்தால் (அதாவது ‘ தயவு ‘ ) வள்ளலார் யாரும் பெறாத சாகாநிலை பெற்றாரோ அந்த தயவு சாதனம் மற்ற ஞானிகளும் பெற்றியிருந்தார்கள், அப்படியிருக்க, “நானே பெற்றேன்” எப்படி இந்த கூற்று..??எப்படி வள்ளலாரின் வழி, புதிய/தனி/பொதூ/சிறப்பு/உண்மைவழியாகும்?அன்பர்களே!வள்ளலார் எடுத்துக் கொண்ட வழி ஒரு புதிய வழியே? அதுவே தனி வழி பொது வழி சுத்த சன்மார்க்க வழியாகும். பார்ப்போம்.வள்ளலார் எடுத்துக் கொண்ட”தயவு” தயவு மட்டுமே. இங்கு “மட்டுமே” என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் வள்ளலாருக்கு முன்பு தயவு சாதனத்துடன் ஆசாரங்கள் சேர்ந்திருந்தது. வள்ளலாரின்”தயவில்”  எந்தவொரு ஆசாரமும் சேர்ந்திருக்கவில்லை. அதே நேரத்தில் வள்ளலார் கொண்டிருந்த “ஆசை” போல் எவரும் கொண்டிருக்கவில்லை. அதாவது மரணத்தை தவிர்த்துக் கொள்ளுதல். இதற்கு எவரும் முன் வரவில்லை காரணம் அவர்கள் பற்றுக் கொண்டிருந்த சமயமதமார்க்கங்கள் “மரணம்” உண்டு, சொர்க்கம் நரகம் இவையில் விசாரம் வைக்கப்பட்டது. இந்நிலையில் தன் ஆசையை நிறைவேற்ற வழி வகை இல்லாத சமய மதத்தை கை விட்டார் வள்ளலார். கைவிட்ட வள்ளலார் உண்மை கடவுளை காண லட்சியம் கொண்டார். உண்மை கடவுளை கண்டு தன் அதிதீவிர விருப்பமான மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் வாழ சாகாவரம் கேட்க ஆசைக் கொண்டார்.ஆனால் அதற்கான வழி….???இறைவனிடமே வேண்டினார்.எங்ஙனம்??உண்மை கடவுள் ஒருவரே உண்டென்றும், அக் கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிப்பட்டார்.நிற்க! கடவுள் இவரே என கருத்தில் கொள்ளாமல் “ஓர் உண்மை கடவுள் உண்டென்றும்..” என்று மட்டும் தான் கருத்தில் கொண்டு  வழிப்பட்டார் வள்ளலார்.மற்றொன்று,இந்த வழிப்பாட்டில் எந்தவொரு ஆசாரமும் இல்லை.அதாவது;கடவுளே!தங்கள் உண்மை நிலையை நீங்களே என் அறிவில் விரித்து, உள்ளத்தில் சொரூபம் காட்டி,  எனக்கு அருள் பாலித்து சாகா வரம் தர வேண்டும் என விண்ணப்பித்தார்.

ஆக,எவராலும், எவ்வகை சாதனம் கொண்டு எவ்வளவு முயன்றாலும் கடவுளின் முழு உண்மையை இப்பிறவிலேயே, இப்பிறவியில் நாம் பெற்றிருக்கும் அறிவால், அறிந்து அனுபவிக்க முடியாது என்று  தெரியப்படுத்திய சமயமத மார்க்கங்களையும்,பயனில்லாத ஆசாரங்களையும் கைவிட்டு விட்டு மேலும், தன்னிடம் இருந்த மற்ற உலக ஆசாரங்களையும்  கைவிட்டு விட்டு,  தயவு மட்டுமே சாதனமாக கொண்டு, உண்மை அறிவால் விசாரம் செய்து, உண்மை அன்பால்  இப்பிறவிலேயே ஆண்டவரின் சொரூபம் காணவும், நித்திய வாழ்வை பெறவும்நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.அழுதார்.. அழுதார்.. அழுதார் கண்டார் உண்மை கடவுளின் சொரூபத்தை.உண்மை அனைத்தும் கடவுளால் விளக்கப்பட்டது.தான் பெற்ற இப்பேறு உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என கடவுளிடத்தில் வேண்டினார்.நித்திய வஸ்துவாகிய அந்த ஒருவராகிய கடவுளிடத்தில் உள்ள தயவு வள்ளலாரிடம் வந்தது அறிந்த ஆண்டவர், அவர் நித்திய வாழ்வை பெற சாகாவரம் அருளினார்.

இதுவே வள்ளலார் பயணித்த வழி. இவ்வழியே சுத்த சன்மார்க்கம் என்கிறார்.எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.நன்றி ஏபிஜெ அருள், கருணை சபை சாலை.

unmai

Channai,Tamilnadu,India