May 8, 2024
tamil katturai APJ arul

வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

வள்ளலார் தனி தேகம் ஒளி வடிவம் பெற்று நம் பார்வையிலிருந்து விலகிய ஆண்டு ஜனவரி 1874.
இன்று ஜூன் 2017.
143 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

வள்ளலார் தனி வழியில் கடவுள் அருளைப் பெற்று மரணத்தை வென்றார்கள். அவ்வழியில் எல்லோரும் பெறுவதாக உள்ளது.இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
ஆனால் தான் சொல்ல வந்த உண்மையை எவரும் தெரிந்துக் கொள்ளவில்லை என்றார்கள். நிலையத்திலும் வழிபாடுகள் சமயத்தின் அடிப்படையிலேயே நடந்து வந்தது.

நீதிமன்றம் நாடி 20 க்கும் மேற்பட்ட வழக்குகளிட்டு தற்சமயம் சமயவழிபாடுகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் வள்ளலாரின் தனி நெறியை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் முரண்பாடுகள் நீடிக்கிறது.

காரணம்:

1.வள்ளலாரின் நெறி ஒரு புதிய தனி நெறியாகும்.

2.சமயத்தின் மீது பற்றை விடாமல் வள்ளலாரையும் முந்தய பற்று சமயத்திலேயே காட்டுவது.

3.வள்ளலார் பெயரை பயன்படுத்தி சங்கம் ஆரம்பித்து அன்னதானம் இட்டு தன் அறிவாலேயே கருத்தை அனுபவத்தை சொல்பவர்கள்.

4. தவம்,மூச்சுபயிறசி, சாதாரண யோகம்,விரதம் இவையில் வள்ளலாரை சேர்ப்பது.

இப்படி பல முரணான வழியில் அறியாமையிலும், தெரிந்தே வல்லப தன்மையிலும் வள்ளலாரையும் அவர்தம் முடிபான நெறியையும் வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த வருடங்களில் பல பெரியவர்கள் வள்ளலார் பெயரில் சங்கங்கள் அமைத்து பணியாற்றினார்கள். பல நூல்கள் இயற்றினார்கள். சமுதாயத்தில் நல்லவர்களாகயிருந்து பெயர் பெற்றிருந்தார்கள். ஆனால் வள்ளலார் பெற்ற பயனை பெறவில்லை. இறந்தார்கள்.

இன்றும் பல பெரியவர்கள் உள்ளனர். அதில் பலர்
பெரியவர்களே.
மார்க்கத்தின் தகுதியான கொலை புலை தவிர்த்தவர்களே இவர்கள்.
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகவே விளக்கம் தருகிறார்கள். மற்றவரை குற்றம் சுமத்துகிறோம்.

எது எப்படியாயினும் 143 வருடங்கள் ஆகிவிட்டது

வள்ளலாரை போல் யார் பயன் பெற்றார்கள்? இல்லையே!

அப்படி எனில் இன்றும் அவர் சொன்ன உண்மையை தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

கடவுளின் உண்மையை இது வரை யாரும் வெளிப்படுத்தவில்லை.

தான் கண்ட உண்மை கடவுள் சமய மதங்களில் சொல்லப்பட்டவை இல்லை என்கிறார்வள்ளலார்.

இனி எவரேனும் வள்ளலார் பெயரில் சங்கம் வைத்ததை பார்த்தால் அவர்களை கீழ் வருபவை கொண்டு காணுங்கள்.

1.சமய கடவுளர் சமய சடங்குகளில் பற்றுக் கொணடியிருத்தல்.
2. சாதி சாத்திரங்களில் பற்று.
3.கோபம் காமம் தடுத்துக் கொள்ளதவர்கள்.
4.கொலை புலை தவிர்க்காதவர்கள்.
5.மற்றவர்களிடத்திலிருந்து வசூலித்து அன்னதானம் ஏழை அநாதை என்றில்லாமல் எல்லோருக்குமே போட்டு அதை மட்டுமே
தொழிலாக பார்ப்பவர்
6.வள்ளலார் நெறி என்று கூறி ஆதாரம் காட்டாமல் தன் அறிவாலே அனுபவத்தால் பேசுவது.
7.ஏதேனும் முறையில் சடங்களை வழிபாடு செய்பவர்கள்.
8. வள்ளலார் பெயரில் பயிற்சி வகுப்பு, அதில் சமய முறையில் தியானம, யோக முறை செய்பவர்கள்.

மேற்படி யாவருமே வள்ளலார் நெறியில் சுத்த சன்மார்க்கத்தார் என்று சொல்ல முடியாது என்பதே உண்மையாகும்.

இவர்களை கொண்டு வள்ளலார் நெறி தெரிந்து கொள்ள முடியுமா?

நீங்களே சொல்லுங்கள் நியாயத்தை!

இவர்களிடத்தில் வள்ளலார் போல் ஏன் ஒளி தேகம் அடையவில்லை என கேட்பது சரியா?

அப்படி எனில் நீ? என கேட்க கூடும்.

என் பணி புறமாக அமைந்து விட்டது. வள்ளலாரை முடிபான நெறியிலேயே காட்டவும் அதற்கான நடவடிக்கை என சென்று விட்டது காலங்கள்.ஆம் காலம் வீணாகி விட்டது. ஆனால் வள்ளலார் சொல்லிய உண்மை என்ன? என்பதை ஆதாரத்துடனே வெளிப்படுத்தும் செயலை என் தோழிகள்,சகோதரர்கள் மற்றும் கணவர் உதவி மூலம் உண்மையாக செய்து வந்துள்ளேன். இன்றே இப்பொழுதே தெரிந்ததில் விசாரம் மேற்க்கொள்ளப் போகிறேன்.
வள்ளலார் நெறி என்ன?
வழிபாடு என்ன?
வள்ளலார் சாகா கல்வி சாத்தியமா?? என்பது குறித்து தொடருவோம். —என்றும் உண்மையுடன்:
ஏபிஜெ அருள் வள்ளலாரின் நெறி எல்லோருக்கும் பொதுவாகவும் உண்மையாகவும் எங்ஙனம் உள்ளது என்று நாம் உண்மை அன்பால் விசாரித்து பயன் பெறுவோம் – விசாரம் தொடரும் – நன்றி
[email protected].

unmai

Channai,Tamilnadu,India