Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
வடலூர் சத்ய ஞானசபை ஜோதி தரிசன நாள்காட்டி 2024 Vadalur Sathya Gnana Sabhai Monthly Poosam Calendar 2024 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
Blog

வடலூர் சத்ய ஞானசபை ஜோதி தரிசன நாள்காட்டி 2024 Vadalur Sathya Gnana Sabhai Monthly Poosam Calendar 2024

  

ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவை,

  1. கறுப்புத்திரை – மாயாசத்தி
  2. நீலத்திரை – கிரியாசத்தி
  3. பச்சைத்திரை – பராசத்தி
  4. சிவப்புத்திரை – இச்சாசத்தி
  5. பொன்மைத்திரை – ஞானசத்தி
  6. வெண்மைத்திரை – ஆதிசத்தி
  7. கலப்புத்திரை – சிற்சத்தி”

அந்த திரைகள் என்ன என்பதை அகவலில் விளக்கி உள்ளார் .

கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந் திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

இந்த ஏழு திரைகளையும் எவ்வாறு விலக்குவது?  என்று நம்பெருமானார் பேருபதேசத்தில் விளக்கியுள்ளார்,

“பரலோக விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.”

“ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.”

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், “தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்“.

“அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.”

“ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது.”

“ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்றத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.”

unmai

Channai,Tamilnadu,India

One thought on “வடலூர் சத்ய ஞானசபை ஜோதி தரிசன நாள்காட்டி 2024 Vadalur Sathya Gnana Sabhai Monthly Poosam Calendar 2024

  • SAMBANTHAM

    மஹாமந்திரம் …….அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
    நாங்கள் குருவாய் உந்தனைத் தொழுதோம் ….. உன்னருளை எங்களுக்குத் தருவாய்……. அருள்வள்ளல் மலரடிக்கே வந்தனம் வந்தனம் வந்தனம்

Comments are closed.