March 28, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் என்ன ஆனார்?

வள்ளலார் என்ன ஆனார்? – ஏபிஜெ அருள்

எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே ” சாகாமல் இருப்பதே”. நான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றேன் என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையை உலகத்தார் விசாரிக்கும் நாள்வரும் தருணம் இதுவே. — ஏபிஜெ அருள். 🙏

# ஆதாரம் # வள்ளலார் ” சாகா கல்வி ” குறித்து பாடியப் பாடல்களின் தொகுப்பு — ஏபிஜெ அருள்

#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்

ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்

தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்

மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா

வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்

போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்

புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்

நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்

நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

கையாத தீங்கனியே கயக்காத அமுதே

கரையாத கற்கண்டே புரையாத கரும்பே

பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே

போகாத புனலேஉள் வேகாத காலே

கொய்யாத நறுமலரே கோவாத மணியே

குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே

செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு

பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்

காலானைக் கலைசாகாத் தலையி னானைக்

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா

மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி

ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த

வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்

கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகா

காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்

தான்என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே

தனித்தபூ ரணவல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்

விளையவிளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம்எல்லாம்

மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை

வானவர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபென் றுரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்

தேற்றிஅருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.

#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை

சாகாத தலைஇது வேகாத காலாம்

தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே

போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே

ஆகாத பேர்களுக் காகாத நினைவே

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே

தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை

சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்

வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்

தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை

நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை

ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்

றேகாத லாற்சொன்னீர் வாரீர்

வேகாத காலினீர் வாரீர். வாரீர்

#6-131 ஆறாம் திருமுறை / சின்னம் பிடி

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி

வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி

சாகாததலைஅறிந்து சின்னம் பிடி

சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

மரணம்  

#5-005 ஐந்தாம் திருமுறை / பிரார்த்தனை மாலை

தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா

சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்

வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்

திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.

#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்

கரண வாதனை யால்மிக மயங்கிக்

கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்

மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்

இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்

இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய

சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்

பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்

கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்

திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ

தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த

கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி

மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே

வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே

பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்

பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ

இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்

என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை

அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்

அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்

சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே

இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ

தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ

அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான

அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே

முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ

முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே

வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா

சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்

புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே

மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே

மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே

பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே

அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை

அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்

வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்

மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்

சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்

தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி

ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்

உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை

ஆழி கரத்தணிந் தாடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்

சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ

ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ – ஆகாத

#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை

திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்

செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்

கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்

கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்

பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்

பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ

வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே

மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.

#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை

அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே

இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி

இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்

சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி

சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி

வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி

மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.

#5-019 ஐந்தாம் திருமுறை / நெஞ்சொடு புலத்தல்

வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்

சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்

வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று

தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.

#5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி

கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்

அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.

#5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி

வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்

ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்

செல்வமு மளித்த சிவமே சிவமே

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்

தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

சாகா வரமுந் தனித்தபே ரறிவும்

மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்

ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்

சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்

அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை

அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்

சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே

தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ

எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்

சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்

சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா

வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்

கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ

கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்

தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

#6-015 ஆறாம் திருமுறை / பெற்ற பேற்றினை வியத்தல்

களித்தென துடம்பில் புகுந்தனை எனது

கருத்திலே அமர்ந்தனை கனிந்தே

தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்

சிறப்பினால் கலந்தனை உள்ளம்

தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்

தடைபடாச் சித்திகள் எல்லாம்

அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை

அடியன்மேல் வைத்தவா றென்னே.

#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்

தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்

சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே

தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்

தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி

வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா

வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த

ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்

தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்

சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி

ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா

உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்

சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்

சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த

அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்

தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்

மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா

வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்

போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்

புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்

நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்

நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்

எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்

இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே

இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்

என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

சாகாத கல்வியிலே தலையான நிலையே

சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே

ஏகாத புனலிடத்தே இடியாத புவியே

ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே

கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்

குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே

மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்

மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு

பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்

காலானைக் கலைசாகாத் தலையி னானைக்

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா

மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி

ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

#6-046 ஆறாம் திருமுறை / பரசிவ நிலை

சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்

மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்

ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்

தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த

தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே

ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்

உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே

வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே

வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்

நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்

நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.

#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்

கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்

தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே

சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே

புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்

பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி

நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்

நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு

புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்

வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து

வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்

பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த

பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த

அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த

அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.

#6-060 ஆறாம் திருமுறை / உலப்பில் இன்பம்

கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே

சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்

மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்

யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.

#6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்

தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்

சிந்தை களித்தேன்என்று உந்தீபற

சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.

#6-069 ஆறாம் திருமுறை / ஆனந்தானுபவம்

காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் – ஞாலமிசைச்

சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்

ஏகா நினக்கடிமை ஏற்று.

#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு

உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்

வுலகிலே உயிர்பெற்று மீட்டும்

நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான

நாட்டமும் கற்பகோ டியினும்

வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே

வழங்கிடப் பெற்றனன் மரண

பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்

பண்ணிய தவம்பலித் ததுவே.

#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று

தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே

மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்

நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்

சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.

#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.

#6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு

வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்

ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ

டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்

வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.

#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை

பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்

தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே

உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த

சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே

படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்

தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்

கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா

நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்

மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகா

கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற

புண்ணே என

unmai

Channai,Tamilnadu,India

One thought on “வள்ளலார் என்ன ஆனார்?

  • Ravikumar S N.

    ஐயா / அம்மா,
    வந்தனம்.
    சாகாவரம் பெற்ற வள்ளலார் எங்கு உள்ளார்?
    அவரை தாங்கள் பார்த்தது உண்டா?
    பதில் தரவும். நன்றி.

Comments are closed.