கொரோனா வைரஸும் – புலால் உண்ணாமையும்


இப்போது சைனாவில் வந்த வைரஸ் மட்டுமல்ல. நம் நாட்டிலும் வந்த சில நோய்களுக்கும், உலக சுற்றுச்சூழல் மாசுக்கும் காரணம் மற்ற உயிர்களை கொல்வதும், புலால் உணவுமே என்பது இன்று ஆய்வுகள் சொல்லும் உண்மை.
அவரவர் உணவு உரிமை சட்டப்படியும் உள்ளது. இதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால்,
எல்லா உயிர்களும் இயற்கையின் தோற்றம்.
இந்த இயற்கை சமூகத்தில் மனிதன் எந்த உரிமை கொண்டு வாழ்கிறானோ, அதே உரிமை மற்ற உயிர்களுக்கும் கொடுக்க வேண்டுமா இல்லையா? ஆரம்பத்தில் இரக்கம் குறித்து நம்மிடம் எழாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், வளர வளர ‘உண்மை இரக்கம்’ குறித்து விசாரணை
நம்மிடம் ஏற்பட வேண்டும். பருவம் பக்குவம் வளரும் போது, பாவம் மற்ற உயிர்களும் நம்மை போல்தான், அவைகளை கொல்லும் போது வலி, துன்பம் ஏற்பட்டு துடித்து சாகுகின்றன எனத் தெரிந்து கொண்டோமா?
இயற்கை படைப்பில், மனித ஆகாரத்திற்கு பல ஆயிர உணவு வகைகள் சத்தாக, ருசியாக,திருப்தியாக உள்ள போது, உணவு மற்றும் நம் மற்ற தேவைகளுக்காக பிற உயிர்களை கொல்வது தேவையற்றது என்ற உண்மையை குறித்து சிந்திப்பது தவறு என்று எந்த சகோதர, சகோதரிகளும் சொல்ல மாட்டார்கள்.
இரக்கம் அன்பு கருணை இவை மனிதராகிய நாம் மனிதர்களிடத்தில் வைத்து வருவதை, இனி நாம் எல்லா உயிர்களிடத்தும் வைக்க முதலில் ஆசைப்படுவோம்.
நன்றி ::: ஏபிஜெ அருள்.
“இரக்கம்” குறித்து நம் கருத்தில் கருத,
வள்ளுவரின்
” கொல்லாமை”
வள்ளலாரின்
” ஜீவகாருண்யம்”
காந்தியின்
” சத்திய சோதனை ”
நமக்கு உதவுகின்றன.
— கருணை சபை சாலை மதுரை.

unmai

Channai,Tamilnadu,India