April 24, 2024
tamil katturai APJ arul

“உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம்

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.—-வள்ளலார்

“கடவுள் உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் — ஏபிஜெ அருள்
இதுவே தருணம் என்று சின்னம் பிடி — வள்ளலார்.
# நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
# சாதி சமயம் மதம் பொய்
ஆம், 19 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்திய உண்மை வெளிப்படும் நல்ல தருணம் இதுவே.

ஒன்று,
கடவுள் இல்லை என்போர் நாக்கு முடை நாக்கு என்கிறார்.
மற்றொன்று;
சாதி பொய் பொய்யே எனவும்
வெளிப்பட்டுள்ள சமயமத மார்க்க‌ங்களில் கடவுளின் உண்மை நிலை உரைக்கவில்லை அதனால் சமயம் மதம் பொய் என்கிறார் வள்ளலார்.

இதோ வள்ளலார் பாடல் வரிகள்:

“நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்குசெல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி”

ஆம்,
இன்று ஏற்பட்டுள்ள‌ சூழ்நிலையை சரி செய்ய வேண்டுமானால்
” உண்மை அறியவதன் மூலமே” சரி செய்ய முடியும் .
ஆம்
வள்ளலார் 19ம் நூற்றாண்டில் அந்த உண்மையை நம்மிடம் தெரியப்படுத்தினார். அன்று எவரும் தெரிந்துக் கொள்ள முன் வரவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள‌அசாதாரண சூழ்நிலை மக்கள் ஒற்றுமையாக இன்பமாக வாழும் நிலையை பாதிப்பாக உள்ளது. இந்த நிலைக்கு நாம் எல்லோருமே காரணம்.
சாதிகள், ஏற்றத் தாழ்வுகள்,அறியாமை இவை ஒழிக்கும் ” சாதனம்” குறித்து இன்று நாம் தெரிந்துக் கொள்ளும் காலம் இதுவே. ஆம், இரக்கம் மட்டுமே கடவுள் அருளை பெற்றுத் தரும் சாதனம்.
இந்த இரக்கம் என்ற கருணையை நம்மிடையே விரைந்து வெளிப்பட‌ தடுப்பவை எவை என்ற உண்மையை வள்ளலார் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அது இந்த “சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே” என்கிறார்.
சத்தியத்தை அறியும் அறிவே உயர்ந்த அறிவு. உயர்ந்த அறிவை பெறும் தேகத்தை பெற்றவனே மனிதன்.இந்த உயர்ந்த அறிவு என்பது நம் நிலை என்ன? நம்மை அனுஸ்டிக்கும் இறைவன் (இயற்கை) நிலை என்ன? என விசாரணை மேற்கொள்வதே.
இதுவரை இருந்த மார்க்கங்கள் இரண்டு.
1) சமய சன்மார்க்கம்
2) மத சன்மார்க்கம்.
இனி உலகத்தாரிடத்தில் வெளிப்படுகின்ற 3 வது மார்க்கம்
” சுத்த சன்மார்க்கம்”
உலகத்தார்களே!
நீங்கள் உண்மை அறிந்துக் கொள்ளுங்கள் அனுபவிக்க வாருங்கள் எனச் சொல்லவில்லை “சுத்த சன்மார்க்கத்தை
தெரிந்துக் கொள்ளுங்கள்” .
கடவுள் மறுப்பாளர்களே!
நீங்கள் கடவுளை நம்புங்கள் எனச் சொல்லவில்லை ” இயற்கை” குறித்து, எல்லா உயிர்களிடமும் உள்ள ஒரு ஓளி அம்சத்தை குறித்து, விசாரியுங்கள்.
நாம் பெற்றிருக்கும் அறிவில் ” முழு உண்மை” தெரிந்துக் கொண்டு உள்ளோம் என்பது எப்படி சரி? கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பதில் நாம் ஏற்புடையவர்களே. காரணம் இந்த உண்மை நம் அறிவில் சரியெனப் படுகிறது. எங்கும் பரந்து விரிந்து மனிதனால் அளவிட முடியாத‌ இயற்கையை குறித்த விசாரணையும் ” நல்ல விசாரணையே” அப்படித்தானே!
இந்த இயற்கை உண்மை விளக்கத்தை இன்பத்தை
” இறைவன்”
எனும் வள்ளலாரின் தனி நெறியை எங்ஙனம் மறுக்க முடியும்.
நிற்க!
சாதி சமய மத மார்க்க மற்றும் நாத்திகம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்குமே உண்மை பொது நெறியாக விளங்கும் வள்ளலார் கண்ட ” சுத்த சன்மார்க்கம்” ஆகும்.

# உண்மை அறிய ஆசை உள்ளவர்கள்,
# எல்லா உயிர்களையும் தம் உயிர் போல பாவிக்கும் உண்மை இரக்கம் கொண்டவர்கள்,
# மனிதரிடத்தில் பொது நோக்கம் வரத் தடுக்கும் சாதி பொய்யே என அறிந்தவர்கள்
# சாத்திரங்கள் ஆச்சாரங்கள் இவையால் எந்தொரு பயனுமில்லை என அறிவில் பட்டவர்கள்,
# இயற்கையின் உண்மை விளக்கம் இன்பமாகிய இறைவனை ஒழுக்கத்தால் அகத்திலே கண்டு அருள் பெற நல்ல விசாரணை செய்வதே வழிபாடு மற்றும் உண்மை அறிவு எனத் தெரிந்துக் கொண்டவர்கள் ,
# அவத்தைகளை நீக்கி சாகா வாழ்வு பெற உள்ள வழி என்ன? அதை ஆண்டவரிடத்திலேயே கேட்பது என முடிவு கொண்டவர்கள்
— இவர்களுக்கு
” உண்மை கடவுள்” வெளிப்படுவது சத்தியம் சத்தியமே என்ற வள்ளலாரின் தனி நெறி உயர்ந்த நெறியே.

உண்மை கடவுளின் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி மரணம் தவிர்த்து தனி வடிவமாகிய ஒளி தேகம் பெறலாம் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியம் குறித்து விசாரம் இனி செய்வோம்.
நன்றி:: ஏபிஜெ அருள்

unmai

Channai,Tamilnadu,India