கலியுகம் முடிந்தது – இனி சன்மார்க்க உலகம்

கலியுகம்: Kaliyugam is over now it is Sanmarga ulagam [சன்மார்க்க உலகம்]

திருவருட்பா- உரைநடை பகுதி பக்கம் – 376

கலியுகத்தின் தாத்பர்யம்:- முதல் யுகத்துக்கு நாள் 8, இரண்டாவது யுகத்துக்கு நாள் 6, மூன்றாவது யுகத்துக்கு நாள் 4, நாலாவது யுகத்துக்கு நாள் 2, ஒரு தினத்திற்கு நாழிகை 60, நிமிஷம் 2,16,000. இரண்டு நாளைக்கு 4,32,000 நிமிஷம். இவ்வண்ணமே 4,6,8, முதலியவற்றிற்கும் கொள்க. ஆக நாள் 20-க்கு நிமிஷம் 43,20,000. இதைக் குழுக்குறியில் வருஷமாகச் சொன்னது. முதல் யுகம் களங்க மார்க்கம்; இரண்டாவது யுகம் திராவக மார்க்கம்; மூன்றாவது யுகம் நவநீத மார்க்கம்; நாலாவது யுகம் பஸ்ம மார்க்கம். ஆதலால், மேற்குறித்த பஸ்மத்தை மேற்குறித்த வருஷத்தில் முடித்து உட்கொண்ட புருஷனாகிய சித்தனுக்குக் கலிபுருஷனென்னு நாமம் வந்தது. மேற்படி பஸ்மத்தை இரண்டு தினத்தில் முடித்து கற்பங்கொண்டு தேகசித்தியைப்பெற்றுத் திரிசியப்படாமல், மேற்படி புருஷன் தனது சங்கல்ப விகல்பங்களால் இவ்வுலகத்தைத் தோன்றலாதி அசைவுகள் செய்வித்து ஆடுகின்றான். இந்தவுலகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் இருக்கின்றது: இதற்குமேல் மேல் புருஷன் செயல் நடவாது; ஞான சித்தன் செயல் உண்டாம். ஆங்கிரச வருடம் புரட்டாசி மாதம் 3ஆம் நாள். கலியுக முடிவு
முதல் யுகத்திற்கு நாள் 8. 2-வது யுகத்திற்கு நாள் 6. 3-வது யுகத்திற்கு நாள் 4. 4-வது யுகத்திற்கு நாள் 2. ஆகக் கூடிய நாள் 20-ம் கற்பம் முடிக்கக் கூடும் நாட்கள். 60X60X60=2,16,000 நொடி ஒரு நாள். அதாவது நாள் ஒன்றுக்கு நாழிகை 60, நாழிகை ஒன்றுக்கு வினாடி 60, வினாடி ஒன்றுக்கு நொடி 60 என்றபடி. நாளிரண்டிற்கு 4,32,000 நொடி. இந்த 4,32,000 நொடியும் அத்தனை வருடமாகக் கலியுகத்திற்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகத்திற்கு வருடம் ஐயாயிரந்தான். இந்தக் கலியுகம் முடிவதற்கு இன்னம் இருபத்தேழு வருடமிருக்கிறது. இந்த ஐயாயிர வருஷமும் ஜீவித்திருக்கும்படி, கலியுகத்திற்குக் குறித்த நாளிரண்டில் கல்பஞ் செய்து தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய கண்ணுக்குத் தோற்றாமல் வேறு வடிவத்தோடு இருக்கிறவன் கலியுக புருஷன். இவனுடைய சங்கல்ப விகற்பங்களால் இந்த உலகம் இப்போ தசைவு பெற்றிருக்கின்றது. இந்த உலகம் சன்மார்க்க உலகமாக மாறுவதற் கின்னும் பன்னிரண்டு மாதமிருக்கிறது. ஆங்கீரச வருஷம்[ 1872-1873] புரட்டாசி மாதம் 3ஆம் நாள்.

https://ta.wikipedia.org/wiki/

Leave a Reply