உண்மை கடவுளின் பெயர் என்ன? 

உண்மை கடவுளின் பெயர் என்ன? — ஏபிஜெ அருள்

சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் வெளிப்படுத்தியுள்ள உண்மை கடவுளின் பெயர் என்ன எனப் பார்க்கும் போது,
அது;
“பெருங்கருணை” 
ஆம் “பெருங்கருணை” யே தனித் தலைமைப் பெரும்பதியாகிய இறைவன்.
அருட்பெருஞ்ஜோதி என்பது 
ஆண்டவரை குறிக்கும் திருகுறிப்பு திருவார்த்தைகளில் ஒன்றாகும்.
ஆதாரம்:
“சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம்.”
இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும் அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புதரென்றும், நிரதிசியரென்றும், எல்லாமானவரென்றும், எல்லாம் உடையவர் என்றும், எல்லாம் வல்லவரென்றும், குறிக்கப்படுதல் முதலிய அளவுகடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைந்தும், உணர்ந்தும் புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே! தேவரீர் திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியேமாகிய யாங்கள் சிற்ற்றிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக் கேற்பித்தருளியெங்களை இரட்சித்தருளல் வேண்டும்.
— வள்ளலார்.
மேலும் ஒரு ஆதாரம்:
திருஅகவல் என்பது;
அண்ட,பிண்ட மற்றும் இயற்கை உண்மை,விளக்கம் மற்றும் இயற்கை இன்பம் அனைத்து உண்மைகளையும் திருஅகவலில் வெளிப்படுத்தி உள்ளார்கள். கடவுள் உண்மை முழுவதும் அதில் வெளிப்படுத்தி விளக்கி இருப்பார் நம் வள்ளலார். அந்த திரு அகவலில் ‘பெருங்கருணை’ பெயர் வராது. மொத்த முழு வடிவத்தின் பெயர் தான் ‘பெருங்கருணை, என்பதை இதன் மூலம் அறியலாம்.
தனித்தலைமைப் பெரும்பதியாகிய “பெருங்கருணை” கடவுளை நம்மவர்கள் 
கீழ்வரும் திருகுறிப்பு திருவார்த்தைகளை தெரிந்து,அறிந்துக் கொண்டு மேற்படி திருவார்த்தைகளால்
துதித்தும், 
நினைந்தும், 
உணர்ந்தும், 
புணர்ந்தும்,
இடைவிடாது நன்முயற்சி செய்தால்,
அனுபவம் விளங்கி அருள் கிட்டுவது சத்தியம் என்கிறார் நம் வள்ளலார்.

****துதியில் சொல்ல வேண்டிய திருவார்த்தைகள்**

இயற்கையின்பினர், 
சத்தியர், 
ஏகர், 
அநேகர், 
ஆதியர், 
அனாதியர்,
அமலர், 
அருட்பெருஞ்ஜோதியர், 
அற்புதர், 
நிரதிசியர், 
எல்லாமானவர், 
எல்லாம் உடையவர், 
எல்லாம் வல்லவர்.

நன்றி: ஏபிஜெ அருள்.

 

unmai

Channai,Tamilnadu,India