April 25, 2024
tamil katturai APJ arul

தயவு என்னை மேலேற்றிவிட்டது! -வள்ளலார்

தயவு என்னை மேலேற்றிவிட்டது!– வள்ளலார்!


தயவு என்பது என்ன என்று கூறுங்கள் ஆன்மநேய சொந்தங்களே! — இது அன்பரின் கேள்வி: விசாரம் செய்வோம் – ஏபிஜெ அருள் :-
**************************
“தயவு” தான் என்ன ஏறாநிலைமிசை ஏற்றியது. அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். ஒருமையில் தான் தயவு வரும் என்கிறார் வள்ளலார்.
இங்கு தயவு என்பது இறைவனயே குறிக்கிறது. அதாவது இறைவன் நமக்கு தயவு செய்வதை குறிக்கிறது. வள்ளலார் இறைவனின் தயவாலேயே ஏறாநிலை, தான் அடைந்தேன் என்கிறார். இதற்கு வள்ளலாரின் சுத்தசன்மார்க்கப் பாடல்கள் ஆதாரமாய் உள்ளது. இறைவனின் தயவை பெறும் புதிய தனி வழியை (சுத்த சன்மார்க்கம்) தான் வள்ளலார் தவத்தால் (முயற்சியால்) கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இறைவன் தயவால், கருணை அமுதம் பெற்றேன் என்கிறார் வள்ளலார். இதுவே இறையருள் என்கிறார். மேலும் தயவு,அருள்,கருணை இம்மூன்றும் ஒரு பொருளையே குறிக்கும். இங்கு பொருள் என்பது ஒன்றொனும் ஒன்றாக விளங்கும் இறை மெய் பொருளே என்கிறார். ஆக, உண்மை கடவுளை காண்பதும், அக்கடவுளால் நமக்கு உண்மை உரைக்கப்படுவதுமே “தயவு”.

இங்கு உரைக்கப்படும் உண்மை எதுவென்றால்;
அவத்தைகளை நீக்கி, இறவாமல், அழியா வடிவம் பெற்று , வாழ்தலே என்கிறார் வள்ளலார். ஆக, தயவு என்றால்; இறைவன் நமக்கு அருளும் கருணை அமுதமே. வள்ளலார் இறைவனிடத்தில் தயவையே வேண்டுகிறார். அதற்கு இரக்கம் விட்டுப் பிடித்தேன் என்கிறார். சுத்தசன்மார்க்க வழியில் தவம் செய்து பெற்றேன் என சத்தியமிட்டு நமக்கு உரைக்கிறார். பாடல் வரிகளில் வார்த்தை::
தயவுடைத் தந்தையே! 
தயவு செய்தருள், தயவுடையான்,நின் தயவை நினைத்தே, தயவு செய்தாய்,தயவுடைய புண்ணியப் பொருளே! , என் மேல் நீ வைத்த தயவு,தயவு செய் ஜோதி,தயவு தாராயேல்…,தயவுடைச்சிவமே

என்கிறார் வள்ளலார். 

இந்த தயவு நமக்கு கிடைக்கும் போது தான், இறைவன் நம் உள்ளத்திலே கலந்து உறைகின்றான். நாம் நலம் பெற, நமக்கு ஆண்டவர் உண்மையை (சாகா கல்வியை) உரைக்கிறார்.
இந்த தயவை நாம் பெற ஒருமை வேண்டும் என்கிறார் வள்ளலார். ஒருமையில் தான் தயவு வரும் என்கின்ற போது ஒருமை என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருமை என்றால் என்ன? என அறிய atruegod.org web page ல் பார்க்கவும்.

Link:[ஒருமை என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கம்/பொருள்]

சில பாடல்கள்::
என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே.

சாகாத தலைஇது வேகாத காலாம்
தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே

ஆகாத பேர்களுக் காகாத நினைவே
ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே. — vallalar.

நன்றி:: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India

One thought on “தயவு என்னை மேலேற்றிவிட்டது! -வள்ளலார்

  • JAYAKRISHNAN.S

    அருமை ஐயா,
    தன்னை ஆய்ந்து உண்மை இறைவனாக தன்னைனையே அறியும் அறிவே தயவு.*.

Comments are closed.