ஆண்டவரே ஏதற்காக உன்னை நான் வாழ்த்தி வணங்க வேண்டும்?

ஆண்டவரே ஏதற்காக உன்னை
நான் வாழ்த்தி வணங்க வேண்டும்?
—— ஏபிஜெ அருள்.

நீ என்னை தோற்றுவித்ததினாலா? தோற்றுவித்தது உன் முடிவு, உன் செயல். அதற்கு நான் ஏன் உன்னை வாழ்த்தி வணங்க வேண்டும்?
நீ எனக்கு விளக்கம் கொடுத்து அறியாமையை நீக்குவித்தாயே அதனால்
உன்னை வாழ்த்தி வணங்க வேண்டுமா?
அது தோற்றுவித்த நீயே எனக்கு செய்ய வேண்டிய கடமை.
நீ எனக்கு பக்குவம் பலன் கொடுத்தாயே அதற்காக நான் உன்னை வாழ்த்தி வணங்க வேண்டுமா?
இச்செயலால் உன் கருணையை நீ வெளிப்படுத்துகிறாய். இதற்கு என்னிடமிருந்து உனக்கு வாழ்த்தையும் வணக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டாய்.

ஆக,
என்னை தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து,துரிசு நீக்குவித்து,பக்குவம் வருவித்து பலன் கொடுக்கும் இவை அனைத்தும் உன் முடிவு உன் செயல் உன் நடனம். ஆனால்,
என்னை படைத்த நீ பல கோடி அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்ற எல்லாவற்றையும் படைத்துள்ளாய். அவை அடங்கிய வெளியை இயற்கையை என்னால் முழுவதும் என் அறிவால் தெரிந்து அறிந்து அனுபவிக்க முடியவில்லையே? தோற்றுவித்த எனக்கு துன்பம், பயம், மூப்பு,பிணி கொடுத்து இறுதியில் மரணத்தையும் கொடுத்துள்ளாய். அவத்தைகள் சம்மதம் இல்லாவிட்டாலும் அவையை நீக்கி கொள்ள வழி தெரியாமல் இதுவரை ஒன்றும் பேசாமல் என் மூத்தோர்கள் இருந்து, இறந்து விட்டனர். ஆனால் இன்று நான் இதிலிருந்து விடுபட என் வள்ளலார் அய்யா எனக்கு வழி காட்டியுள்ளார்கள். என் ஆசான் வள்ளலார் என்னிடம் ஆண்டவராகிய உங்கள் உண்மையை உள்ளது உள்ளபடி உரைத்து விட்டார்கள்.
உண்மை கடவுள் அருளால் மட்டுமே அண்ட திறங்கள் இயற்கையை முழுவதும் காண முடியும். கடவுளின் உண்மை நிலை காணும் போது தான் அக்கடவுளால் சாகா கல்வி கற்று தரப்படுகிறது. இவை பெற்றிட சுத்தசன்மார்க்கமே உண்மை வழி.
திருவருளே!
இயற்கை உண்மைகள் வெளிப்பட,
இறவாத வாழ்வில் வைத்திட,
இறைவா உன்னை பணிந்து தணிந்து
வள்ளலார் கண்ட
உண்மை பொது வழியில்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்.
அன்புடன்:: ஏபிஜெ அருள் 06-09-2017
கருணை சபை மதுரை.

unmai

Channai,Tamilnadu,India