வள்ளலார் சொல்லியிருப்பவை உண்மையா?

வள்ளலார் சொல்லியிருப்பவை உண்மையா? — ஏபிஜெ அருள்

வள்ளலாரின் புதிய தனி நெறியில் வெளிப்படும் ”பெருங்கருணை” உண்மைக் கடவுள் மற்றும் அருளால் கிடைக்கக் கூடிய ”மரணமில்லா பெருவாழ்வு” பற்றியும் எல்லோருக்கும் தெரிவிக்க முடியும் அல்லது எல்லோராலும் இந்த உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் – எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி அமைந்திருப்பது கடவுளின் கருணையே –
ஆனால் நெறியின் உண்மையை, சாகா கல்வியை எவரால் அறிந்து கொள்ள முடியும் என்றால், ”பொது நோக்கம் உடையவர்கள்” இந்த நெறியை உண்மை அன்பால் உள்ளத்தில் கருதினால் உண்மை கடவுளை அறிய முடியும் என்பதை சத்தியமிட்டு சொல்கிறார் வள்ளலார்-
பொதுவுணர் உணரும் போதலால் பிரித்தே
அது எனில் தோன்றா தருட்பெருஞ் ஜோதி 
 – அகவல் 121-122

பதவிக்கு, மேல்படிப்புக்கு, புறத்தில் தகுதியை நாம் நிர்ணயித்து உள்ளோம்- அதுபோல் கருணை கடவுளின் உண்மை அறிய ஒழுக்கம் என்கிற தகுதி வேண்டும் என அறிவில் நமக்கு படவில்லை?
ஒரு தடவை பெரிய பதவியில் உள்ள சான்றோர்கள் வீற்றியிருந்த இடத்தில் இருந்த சமயத்தில், என்னிடத்தில் மதிப்புமிக்க அவர்களில் ஒருவர்;
“அப்படி என்ன புதியதாக தனியாக வள்ளலார் சொல்லிவிட்டார்- அது பற்றி எங்களிடம் விளக்கு என்றார்கள்”
இங்கு வீற்றியிருக்கும் நீங்கள் எல்லோருமே மனித சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் – மனிதர்களுள் எவ்வித வேறுபாடும் பார்க்க கூடாது என்பதில் சேர்ந்தே பணியாற்றுகிறீர்கள்- நல்ல நண்பர்கள்- ஆனால்; நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி சமயத்தில் பற்று வைத்துள்ளீர்கள்- தங்களின் சமயங்களில் வெளிப்பட்டுள்ள கடவுளர் வேறுப்பட்டுள்ளனர்- சடங்குகள்,ஆச்சாரங்கள் வேறுப்படுள்ளன- கொள்கை தனித்தனி- வேறுப்பட்டு விளங்கினாலும் மனிதர்கள் ஒற்றுமையாக இருந்து இன்பமாக வாழ வேணும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருப்பவர்கள் – ஆனால் கடவுள் விசயத்தில், கொள்கையில் வேறுப்பட்டுள்ளீர்கள்– நல்ல நண்பர்களாக இருந்தாலும் தங்களிடத்தில் உள்ள இந்த கடவுள் வேறுப்பட்ட கொள்கை குறித்து ஒரு தடவை கூட உங்களுக்குள் ஒரு நல்ல விசாரணை செய்யவில்லையே- 
“நம்மிடமுள்ள இந்த வேறுபாட்டில் எது உண்மையாக இருக்கும்? ஏன் நம்மிடம் ஒருமித்த கொள்கை இல்லை- உலகை படைத்தது எந்த கடவுள்? கடவுளின் உண்மை என்ன? உண்மையறிவது தானே சத்தியறிவுஏன் இது வரை ஒருமித்த கருத்துக்கள் உடைய நாம் நல்ல விசாரணை செய்யவில்லை? என்று உங்களிடம் ஏன் இதுவரை இந்த எண்ணம் தோன்றவில்லை?” 
என அவர்களிடம் நான் பணிந்து சமர்பித்து மேலும் கீழ்வருமாறு தொடர்ந்தேன்:
“என் மார்க்கம் உண்மையறியும் அறிவு மார்க்கம்” நம் நிலை என்ன? நமக்கு மேல் அனுட்டிக்கும் கடவுளின் நிலை என்ன? என நல்ல விசாரணை செய்ய சொல்லுகிறார் – திருவருட்பிரகாச வள்ளலார்- அக அனுபவமே உண்மை என்கிறார்- என்றேன் –
ஆம், வள்ளலாரின் நெறி ஓர் உண்மை பொது நெறியே என்பதை தெரிந்துக்கொண்டோம் என்றார்கள்- அந்த வார்த்தையை கேட்டவுடன் தாங்கள் அனைவரும் தெரிந்துக் கொண்டமைக்கு எனது நன்றி என்று காலில் விழுந்தேன் – அவர்கள் அனைவரும் எழுந்தனர்- எழுந்தனர்-
ஆக,
தெரிந்து கொள்வது,
அறிந்து கொள்வது;
அனுபவிப்பது,

என உள்ளதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்-
தெரிந்து கொள்ள எல்லோராலும் முடியும்-
அறிந்துக் கொள்ள கருணையும், பொது நோக்கமும் வேண்டும்-
அனுபவிப்பது ஆண்டவன் அருளால் மட்டுமே முடியும் அந்த அருளை பெற வள்ளலார் காட்டும் வழியில் வழிபாடு செய்தல் வேண்டும்-
நன்றி :: அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை-107

unmai

Channai,Tamilnadu,India